எங்களது அறிமுகம்   


நாங்கள் விசுவாசிக்கின்றோம்

 

 வேதாகமம் தேவனுடைய பரிசுத்த ஆவியினால் உள்ளுந்தப்பட்ட சத்திய வார்த்தை. அது நமக்கு அறியத்தருவது போன்று தேவன் வானத்தையும் பூமியையும் அதிலுள்ளவை களையும் படைத்தார். அவைகள் யாவற்றுக்கும் மேலாக மனி தர்களாகிய நாம் அவரது படைப்பின் முடியாயுள்ளோம். அவர் நம்மில் அளவுகடந்த அன்பாயிருக்கிறார். முதல் மனிதர்களான ஆதாம் ஏவாள் கடவுளின் கட்டளையை மீறி பாவம் செய்த தால் அவர்கள் வழியாய் வந்த மனிதர்களாகிய நாம் தேவனி டத்திலிருந்து பிரிந்துபோய் தற்போது கெட்டதைச் சேவிக்கி ன்றோம். நமது சொந்தப் பலத்தினால் ஒருபோதும் அவரி டத்தில் திரும்பமுடியாது தவிக்கும் பாவிகளாயுள்ளோம். எனவே கடவுள் தமது சொந்த மகனான இயேசு கிறிஸ்துவில் மனுவுரு எடுத்து நம்மிடத்தில் வந்தார். இயேசு இந்த உலகில் வாழ்ந்து பாவிகளால் சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

மரணத்துடன் அவரது பரிசுத்த வரலாறு முடிந்துபோகாது தொடர்கின்றது. அவர் மூன்றாம் நாள் மறுபடியும் மரணத்திலிருந்து சரீரத்துடன் உயிர்த்தெழுந்தார். இயேசு இவ்வுலகில் வாழ்ந்த பலரால் காணப்பட்டு மீண்டும் பரலோ கம் சென்றுள்ளார். அவர் சொல்லியிருந்தபடி மீண்டும் இப்பூமிக்குத் திரும்பவுள்ளார். அவரது இண்டாம் வருகை பாவி களை மீட்கும் பணியல்ல மாறாக, அவரால் மீட்டுக்கொள்ளப்பட்டவர்களை அவருடன் பரலோகத்தில் சேர்த்துக்கொள்ள வருகிறார். அவரை விசுவாசியாத மனிதர்களை நியாயந்தீர்க்க வருகிறார். அவர் மரணத்தையும், சாத்தானையும் வென் றதால் நமக்காக வழியைத் திறந்துள்ளார். நாம் மீண்டும் கடவுளுடன் ஒப்புரவாகலாம். ஒரு அழியாத உறவை அவருடன் ஏற்படுத்தலாம். முடிவில்லாத வாழ்வைச் சுதந்தரித்துக்கொள்ள இயேசுவே ஒரே வழி. நம்மை நாம் மீட்டுக்கொள்ள நம்மால் முடியாது, என்றாலும் இதை இயேசு நமக்காகச் செய்தார். இதைத்தான் நமது கிரியைகள், சடங்காசாரங்கள் என்று சொல்லாமல், அவரது சுத்த கிருபை (பரிசு) என்று விசுவாசிக்கின்றோம். 

       


போதகர் குறித்து சிறு அறிமுகம்

போதகர் ஜோய் செல்வதாசன் ஸ்ரீல ங்காவை பிறப்பிடமாகக் கொண்ட வர். உள்நாட்டுக் கலவர அகதியாக 1984ம் ஆண்டு ஜேர்மன் நாட்டை வந்தடைந்தார். 1986 லிருந்து 1987 வரை ஜேர்மன் மொழியில் துரித படிப்பினை மேற்கொண்டார். இந்நா ட்டில் திருமணத்தைக் கண்ட அவரு க்கு மூன்று பிள்ளைகள். 1988 லிரு ந்து 1991 வரையில் Brake  வேதா கம கல்லூரியில் பயில்விக்கப்பட் டார். இறுதியில் Melsungen பட்ட ணத்திலுள்ள சுவிசேஷ சபை ஒன் றில் சபைப் பயிற்சி ஒன்றினை மேற்கொண்டார். 1994 லிருந்து 1996 வரையில் அமெரிக்காவிலுள்ள Col-umbia பல்கலைக்கழக வெளிவாரி மிஷன் காலாசாலை ஒன்றில் தொடர்ந்து கல்வியை மேற்கொண் டவர், வேதாகமக் கல்வியில் M.A (Master of Arts) பட்டத்தைப் பெற் றார்.         

 

 

கிருபை சுவிசேஷ சபையின் வரலாறு 

 

ஜேர்மன் தேசத்தின் மேற்கு திசையில் உள்ள Nordrhein Westfalen என்னும் பரந்த பகுதியில் தமிழர்கள் மத்தியில் இயேசுவின் திருச்சபை ஒன்று கட்ட ப்பட Kontaktmission மூலமாய் மிஷனரியாக அனுப்பப்பட்ட ஜோய் செல்வ தாசன் அவர்கள், 1996ம் ஆண்டு Herne நகரை வந்தடைந்தார். 2004ம் ஆண்டு வரை பெரும்பாலும் சுவிசேஷம்  அறிவிக்கும் மிஷனரியாகப் பணியாற்றினார். சுவிசேஷத்துக்கு ஆர்வம் காட்டிய சில மனிதர்களுக்கு மீட்பு வரலாற்றை விளக்கி அவர்களது இருதயக் கண்கள் திறக்கப்பட்டபோது அவர்களுக்குள் ஒன்றுதிரட்டப்பட்டவர்களுடன் சிறிதாக ஒரு சபை ஆரம்ப மாகியது.  இவ்வித மாய் சபை உருவாகியபோது அதற்கான ஆவிக்குரிய பணிகளைப் பொறுப் பேற்கும் அவதி ஒன்று இருந்தது. அந்தக் குறையைத் தீர்க்க சபை தானே ஜோய் செல்வதாசன் அவர்களை சபை போதகராக ஏற்படுத்தியது. இவ்விதமாகத் தனது உருவாக்கத்தைப் பெற்ற இந்த சபைக்கான உந்துதலாயிருந்தது வேதாகமம் தவிர வேறு எதுவுமில்லை. வேதாகம வெளிச்சத்தில் கண் திறக்கப்பட்ட பாவிகளான எங்களுக்கு இன் னும் அதிக உதவியாக இருந்தது கர்த்தரின் கிருபை என்பது  தெளிவாயிற்று. ஆகவே கிருபையினாலே இரட்சிப்பு என்னும் பரிசைப் பெற்ற நாங்கள் எங்கள் சபைக்கு கிருபை சுவிசேஷ சபை என்னும் பெயரைச் சூட்டியது நலமாகக் கண்டது. தொடர்ந்து வந்த எங்களது சபை, தனது அடுத்த தலைமுறையைச் சந்தித்துள்ளது மனமகிழ்ச்சிக்கானது. இந்த அற்புத வரலாறு தொடர எங்களது சபையின் தலையாகிய இயேசு தாமே நம்மை வழிநடத்த வேண்டும் என்பதை நாடியுள்ளோம்.